தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வினை , செப்டம்பர் 1ம் தேதி நடத்த உள்ளது . டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் . இதற்கான நுழைவு சீட்டு ஆகஸ்ட் 22 அன்று வெளியானது. தேர்வாணையம் வெளியிட்ட விதிமுறைகள்: * தேர்வு எழுதுபவர் அதற்கான ஹால் டிக்கெட்டுடன் வரவேண்டும், இல்லாமல் வந்தால் தேர்வெழுத அனுமதி இல்லை. * தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படமோ அல்லது கையொப்பமோ சரியாக இல்லை என்றால் அதற்குப் பதிலாக வேற ஒரு அத்தாட்சியை அலுவலரின் சான்றிதழ் பெற்று கொண்டு வரவேண்டும். * காலை 9 மணிக்குள் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்குள் வர வேண்டும். * தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்பட்ட பதிவு எண்கள் உள்ள தேர்வு அறையில் சென்று தான் அமர வேண்டும். * தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே எடுத்து வரவேண்டும். * கருப்பு அல்லது நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே ஓ எம்ஆர் விடை