தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வினை , செப்டம்பர் 1ம் தேதி நடத்த உள்ளது .
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் . இதற்கான நுழைவு சீட்டு ஆகஸ்ட் 22 அன்று வெளியானது.
தேர்வாணையம் வெளியிட்ட விதிமுறைகள்:
* தேர்வு எழுதுபவர் அதற்கான ஹால் டிக்கெட்டுடன் வரவேண்டும், இல்லாமல் வந்தால் தேர்வெழுத அனுமதி இல்லை.
* தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படமோ அல்லது கையொப்பமோ சரியாக இல்லை என்றால் அதற்குப் பதிலாக வேற ஒரு அத்தாட்சியை அலுவலரின் சான்றிதழ் பெற்று கொண்டு வரவேண்டும்.
* காலை 9 மணிக்குள் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.
* தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்பட்ட பதிவு எண்கள் உள்ள தேர்வு அறையில் சென்று தான் அமர வேண்டும்.
* தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே எடுத்து வரவேண்டும்.
* கருப்பு அல்லது நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே ஓ எம்ஆர் விடைத்தாளை நிரப்ப வேண்டும். பென்சிலில் எழுதக்கூடாது.
* தேர்வறைக்குள் செல்போன்கள் மின்னணு சாதனப் பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
* தேர்வு எழுதுபவர்களுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், புகைப்படம், பதிவு எண், உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என்று சரிபார்க்க வேண்டும்.
* தேர்வு எழுதும் முன் தங்களது வினாத்தாளில் பதிவு எண்ணை எழுத வேண்டும்.
* தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு கேள்வித்தாள் வழங்கப்படும்.
* 10 மணிக்கு மேல் கேள்வித்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.
* ஓஎம்ஆர் விடைத்தாளில் கேள்விகளுக்குரிய பதிவு எண்ணை தவறாகப் பதிவு செய்தாலும் ஓஎம்ஆர் விடைத்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.
* தேர்வு எழுதுபவர்கள் பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதற்கான வினாத்தாள் தரப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* தேர்வு விடைகளை அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
* கேள்வித்தாள்களில் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
* காலை 10.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் எந்த தேர்வரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
* விடைத்தாள்களில் எதுவும் எழுதக்கூடாது. அப்படி ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அந்த விடைத்தாள் செல்லாததாகிவிடும்.
* ஒரு கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே எழுத வேண்டும்.
* வினாத்தாளில் தேர்வர்கள் விடைகளை குறிக்கக் கூடாது.
* தேர்வறைக்குள் தேர்வு எழுதச் செல்லும் தேர்வர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு முடியும் முன்பு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
* தேர்வறையில் காப்பி அடிப்பது, விதிமீறிய செயல்களில் ஈடுபடுவது, தவறான மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்
ஒன்று படுவோம் ஒற்றுமையாக...
வெற்றி பெறுவோம் நேர்மையாக....
🎉 ஞானம் மல்டிமீடியா 🎉
*வெற்றி பெறவாழ்த்துகிறோம்*
Comments
Post a Comment